Monday, February 27, 2012

TNAயினர் ஜெனிவா வந்தால் அவர்களின் முகமூடி கிழித்தெறிப்படும் - அருண் தம்பிமுத்து!

Monday, February 27, 2012
ஜெனிவா::புலிகளுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜெனிவாவுக்கு வந்தால், அவர்களின் முகமூடியை கிழித்தெறிய போவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.அருண் தம்பிமுத்துவை போல் பேர்ன் நகரில் வசித்து வரும் புலிகளின் எதிர்ப்பாளரான வீரையா காந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு போர் குற்றங்களில் தொடர்புள்ளமைக்கான ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாக கூறியுள்ளார்.

சம்பந்தன் போன்றோர் வரும் வரை காத்திருக்கின்றோம். அண்மையில் சூரிச் நகருக்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபாகரனின் இறுதி இலக்கை அடைவோம் எனக் கூறியதாக காந்தன் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் ஜெனிவா செல்வது குறித்து இதுவரை எந்த தீர்மானங்களை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment