


Tuesday, February 28, 2012ஜெனிவா::சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாப்பதில் இலங்கைஅர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆரம்ப தினமான நேற்று ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றைய தினம் ஆற்றிய உரையின் முக்கியவிடயங்களின் தமிழாக்கத்தை கீழே காணலாம்.
மனித உரிமைகளை மேம்படுத்துவது குறித்த இலங்கையின் அனுபவங்களைபகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகளும் ஒன்பது மாதங்களுக்கும் கடந்துள்ளநிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்களவு வெற்றியீட்டியுள்ளது.
நிலையான சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கான மெய்யான அவசியத்தைஅரசாங்கம் உலக சமூகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளது.
2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னரான இலங்கையில் கிரமமான முறையில் சட்டம் ஒழுங்குநிலைமை மேம்படுத்தப்படுகின்றது.
மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தம் மக்களை மட்டுமன்றி அவர்களின்வாழ்வாதாரம், உட்கட்டுமான வசதிகள், சமூகக் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறுவிடயங்களை பாதித்துள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீவிர கவனம் செலுத்திவருகின்றது. பொருளாதார அபிவிருத்தி, மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்ட காரணிகளைமுதனிலைப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமர்வுகளின் போது உண்மையைக்கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகளை செவ்வனே மேற்கொள்ள போதியளவு கால அவகாசம் வழங்கப்படவேண்டுமென கோரியிருந்தோம்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கையைசமர்ப்பித்துள்ளதுடன், சில முக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.
கடந்த கால சமாதான முனைப்புக்களில் ஏற்பட்ட தோல்வி உள்ளிட்டபல்வேறு விடயங்கள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ளடப்பட்டுள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக சாட்சியமளித்தஅதேவேளை, 5000த்திற்கும் மேற்பட்ட எழுத்து மூல சாட்சியங்களும் கிடைக்கப் பெற்றன.
சுதந்திரமாகவும், பகிரங்கமாகவும் இந்த சாட்சியங்கள்அளிக்கப்பட்டன.
எவ்வாறெனினும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் நிபுணர் குழுஅறிக்கை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
நிபுணர் குழு பகிரங்கமான சாட்சியங்கள் திரட்டவில்லை.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையிலேயே நிபுணர் இறுதிஅறிக்கையை சமர்ப்பித்த அதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நம்பகமான மூலங்களின்ஊடாக தகவல்களை திரட்டி யதார்த்தமான அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் உள்ளிட்ட ஒட்டு மொத்தவிடயங்கள் தொடர்பிலும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், முன்னாள் போராளிகளுக்குபுனர்வாழ்வு அளித்தல், தடுத்து வைக்கப்பட்ட கைதிகள், சட்டவிரோத ஆயுதங்களைகளைதல், காணிப் பிணக்குகள், மொழிக் கொள்கைகளை அமுல்படுத்தல், சமூகப்பொருளதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், நிர்வாக சர்ச்சைகள் உள்ளிட்ட பலவிடங்கள் தொடர்பில் ஆணைக்குழு பரிந்துரைகளை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்தஆரம்பித்துள்ளது.
திட்டமிட்ட முறையில் மிகவும் கிரமமான இந்தப் பரிந்துரைகளைஅமுல்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், நிலக்கண்ணி வெடிகளைஅகற்றுதல், முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளித்தல், வடக்கில் சிவில்நிர்வாகத்தை ஏற்படுத்தல், தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களை நியமித்தல்போன்ற விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள்பேணப்பட்டனவா என்பது குறித்து ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இராணுவ நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மிகவும்முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பில்மிகத் துல்லியமானதும், விரிவானதுமான புள்ளி விபரத் தரவுகள் விரைவில் வெளியிடப்படும்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்வோர், ஆயுதமேந்தி உயிரிழந்தோர்உள்ளிட்ட சகல விடயங்கள் பற்றியும் கண்காணித்து அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள்கொல்லப்பட்டதாக வெளியான தகவல்கள் அபரிமிதமான கற்பனை என்பதனை அறுதியிட்டு குறிப்பிடமுடியும்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைப்பொறிமுறைமையொன்று உருவாக்கப்படும்.
குற்றச் செயல்கள் தொடர்பில் முதலில் தரவுகள் திரட்டப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும்.
இதற்காக சட்ட மா அதிபரின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளத்தீர்மானித்துள்ளோம்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் குறித்து இராணுவ நீதிமன்றமும் விசாரணைகளைஅரம்பித்துள்ளது.
செனல்4 ஊடகத்தின் ஆவணப்படும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போதுபொதுமக்கள் உயிரிழந்தமை போன்றன விடயங்கள் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் விசாரணைநடத்தவுள்ளது.
நாட்டின் மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் தேசிய மனித உரிமைசெயற்திட்டமொன்று அமுல்படுது;தப்பட உள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில்சிவில் மற்றும் இராணுவ மட்டத்திலான விசாரணைகள் நடத்தப்படும்.
இலங்கைக்கு ஒரு தடவை விஜயம் செய்யுமாறு ஏற்கனவே மனித உரிமைஆணைக்குழுவின் ஆணையாளருக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.
உண்மைகை; கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எவ்வாறுஅமுல்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில் ஒக்ரோபர் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளில் இலங்கைவிரிவான விளக்கம் அளிக்கும்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் போது தேவையற்ற தலையீடுகள்அனாவசியமானவை.
அவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஆரோக்கியமாகஅமையாது.
பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 4000 பேரில் தற்போது 225 பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிரானவிசாரணைகளை துரித கதியில் பூர்த்தி செய்ய சகல வழிகளிலும் முயற்சி செய்யப்படுகின்றது.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை மீள நிலைநாட்டும்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரண்டு மாகாணங்களிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இராணுவத்தினர் சிவில் நிர்வாகநடவடிக்கைகளிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 290000 பொதுமக்களில் தற்போது 6647பேர் எஞ்சியிருக்கின்றனர். ஏனைய அனைவரும் ஏற்கனவே மீள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள்செலவிடப்பட்டுள்ளன.
நாட்டின் அனைத்து இன சமூகங்களினதும் யதார்த்தமான அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்படாத வரையில் மெய்யான சமாதானத்தை நிலைநாட்ட முடியாது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறிமுறைமையானது உள்நாட்டுரீதியானதாகவே அமைய வேண்டும்.
நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த அனைத்து தரப்பினரதும்ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக்குழுஉருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகளை பேணும் விவகாரத்தில் இலங்கை தொடர்ந்தும்அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
உலகின் முக்கிய மனித உரிமை அமைப்புக்களுடன் இலங்கை இணைந்துசெயற்படுகின்றது.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் உள்நாட்டுரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாப்பதில் இலங்கை மிகவும்உறுதியுடன் நடவடிக்கை மேற்கொள்கின்றது.
இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு சில வெளிநாட்டுசக்திகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தன.
எவ்வாறெனினும், ஒரு தரப்பு சர்வதேச சக்திகள் இலங்கைக்குவிரோதமாக செயற்பட்டு வருகின்றமை வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment