Tuesday, February 21, 2012இலங்கை::ஈரானில் யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ளதால் சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருட்களின் விலையேற்றமே இலங்கையில் எரிபொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகும் என சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நடைபெற்ற மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கான மண்ணெண்ணெய் மானிய நிவாரண முத்திரை விநியோக வைபவத்தில் உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.
இதில் தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இலங்கை அரசாங்கம் ஒருபோதும் மக்களின் வாழ்க்கை சுமையை அதிகரிப்பதற்கு விரும்பவில்லை. வேனுமென்று அரசாங்கம் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கவுமில்லை.
இன்று உலகில் ஏற்பட்டுள்ள எரிபொருட்களின் விலையேற்றமே இலங்கையிலும் எரிபொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமாகும்.
ஈரானிலுள்ள எரிபொருட்களை வெளியே கொண்டு செல்ல முடியாதவாறு அமெரிக்கா பல் வேறு தடைகளை ஈரானுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதுவும் உலக சந்தையில் எரிபொருட்களின் விலையேற்றத்திற்கு ஒரு காரணமாகும்.
கடந்த 18.2.2012 ம் திகதியும் உலக சந்தையில் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் இலங்கையில் பெற்றோல் லீற்றருக்கு 18 ரூபாவால் இலங்கையிலும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இலங்கை அரசாங்கம் செய்யவில்லை.
இலங்கைக்கு ஈரான் கடனடிப்படையிலும் எரிபொருட்களை வழங்கி வருகின்றது இந்நிலையில் இந்த தாக்கத்தினால் இதிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
இலங்கைக்கு ஈரான் மின்சார அபிவிருத்தி உட்பட பல் வேறு அபிவிருத்திக்காக 4500 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் மின்சாரமில்லாத கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கி மிண்ணொலியை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இவ்வாறு ஈரானின் உதவி இலங்கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றது.
இன்று ஈரான் சகல வளங்களிலும் அபிவிருத்தி பெற்ற ஒரு நாடாக விளங்குகின்றது.
அரபு உலகில் ஈரான் சகல துறைகளிலும் முன்னேறியுள்ளது. ஈரானின் பொருளாதாரம் தகவல் தொழிநுட்பம், பாதுகாப்பு இத்தனையையும் ஈரான் வளர்த்துள்ளது.
உலகம் ஒரு முறை ஈரானை வியந்து பார்க்கும் அளவுக்கு ஈரான் இன்று முன்னேறியுள்ளது. இவ்வாறான ஒரு நாட்டை அழிப்பதற்கு அமெரிக்கா இன்று சதிகளை மேற்கொண்டு ஈரானின் கட்டமைப்பை குலைத்துவிட சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈரானில் யுத்தமொன்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இலங்கை நாட்டு மக்கள் அனைவரும் பிராத்திக்க வேண்டும்.
இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள இந்த எரி பொருட்களின் விலையேற்றத்தினால் சகல பொருட்களுக்கும் இன்று விலை உயர்ந்துள்ளது.
சீமெந்து பக்கட்டின் ஒன்றின் விலை இருபது ரூபாவால் அதிகாரித்துள்ளது.
இந்த நிலையில்தான் நமது ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 200 ரூபா மானியம் வழங்கப்படுகின்றது.
இந்த 200 ரூபா போதுமானதல்ல எனினும் எமது வாழ்க்கை சுமையை சற்று தனிப்பதற்கு இது உதவும். இவ்வாறே மீன்பிடியாளர்களுக்கும் இந்த எரிபொருள் மாணிய உதவியை அரசாங்கம் வழங்க திட்டமிட்டுள்ளது என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment