Thursday, February 23, 2012

இன்ஹேலரில் ‘காபி புகை’ உறிஞ்சும் இளசுகள் கண்காணிக்கிறது அமெரிக்க அரசு!

Thursday, February 23, 2012
வாஷிங்டன்::அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது ‘ஜோ’. நம்மூரு காபிதான். செல்லப் பெயர் ஜோ. கடைக்கு போய் அதை குடிக்கக்கூட இளசுகளுக்கு அலுப்பு. ‘ஏரோஷாட்’ என்ற பெயரில் இன்ஸ்டன்ட்டாக வந்துவிட்டது. இருமல், சளிக்கு உறிஞ்சும் இன்ஹேலர் போல இதை வாயில் வைத்து உறிஞ்சினால், அதில் இருந்து வெளியேறும் காபின் புகை, வாயில் பட்டதும் கரைந்து காபி குடித்த சுவையை தருகிறது. ஒன்று விலை ரூ.150. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இதனுடன்தான் திரிகிறார்கள் மாணவ, மாணவிகள். அதிக ‘கிக்’ கிடைக்கிறதாம். ‘‘12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இழுக்க கூடாது. மற்றவர்களும் ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் கூடாது’ என்ற எச்சரிக்கையுடன் வெளிவந்திருக்கிறது. இது ஆரோக்கியமானதுதானா என்று தற்போது அதிரடி சோதனையில் இறங்கியிருக்கிறது அமெரிக்க சுகாதார துறை. இதற்கிடையில், தினமும் 4 கப் காபி குடித்தால் சர்க்கரை நோய் வராமல் தப்பிக்கலாம் என்கிறார்கள் ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள். 42,659 பேரிடம் 9 வருடங்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாம். ‘தினமும் 4 கப் காபி குடிப்பவர்களுக்கு, மற்றவர்களைவிட 20 முதல் 30 சதவீதம் வரை டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்கின்றனர்.

No comments:

Post a Comment