Thursday, February 23, 2012

பெங்களூர் கோர்ட்டில் சசிகலா வாக்குமூலம்!

Thursday, February 23, 2012
சென்னை::வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனி கோர்ட்டில் சசிகலா 2வது நாளாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூர் தனி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை கடந்த 18ம் தேதி நடந்தது. நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம் பகல் 12 மணி வரை 3 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டன. Ôநரேஷ்பாபு, ரமேஷ் ஆகியோரிடம் 4 பிரின்டிங் மிஷின் வாங்கினீர்களாÕ என்ற கேள்விக்கு ÔதெரியாதுÕ என்று சசிகலா பதில் அளித்தார். கடந்த 1991-92ல் மேற்படி 2 பேரிடம் ரூ.8 லட்சத்துக்கு வாங்கிய பிரின்டிங் மிஷின் எடுத்து வராமல் அங்கேயே வாடகைக்கு விடப்பட்டது. நரேஷ் சவுக் என்பவரிடம் ரூ.64 லட்சத்து 5,000க்கு பிரின்டிங் மிஷின் வாங்கப்பட்டது உண்மை என்றும் சசிகலா தெரிவித்தார். இன்று நடந்த விசாரணையின் போது முதல்வர் ஜெயலலிதா, சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களது சார்பில் வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர்

No comments:

Post a Comment