Thursday, February 23, 2012

யுவதி மீது அசிட் தாக்குதல்; பிரதேச சபை உபதலைவருக்கு விளக்கமறியல்!

Thursday, February 23, 2012
இலங்கை::யுவதி ஒருவருவர் மீது அசிட் வீசி தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் படல்கும்புர பிரதேச சபையின் உப தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். 19 வயதான குறித்த யுவதி பிரதேச சபை உப தலைவரின் ஆசை நாயகி என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அசிட் வீச்சினால் கடும் காயங்களுக்கு இலக்கான யுவதி மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment