Thursday, February 23, 2012இலங்கை::இலங்கைக்கு எதிரான சக்திகளை தேசிய ரீதியில் எதிர்கொள்வதற்காக பொது மக்கள் ஒத்துழைப்பு இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பதில் பேச்சாளரும் அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மாநாட்டில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் இந்த மக்கள் இயக்கம் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
அரசுக்கு ஆதரவான சகல அரசியல் கட்சிகளும் தனியார் அமைப்புக்களும் பொது மக்களும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment