Thursday, February 23, 2012

முந்தலில் மூன்றரை வயதுப் பிள்ளை கடத்தப்பட்டுள்ளது!

Thursday, February 23, 2012
இலங்கை::முந்தல் பிரதேசத்தில் பாலர் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் பிள்ளையொன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பாலர் பாடசாலைக்கு நேற்று பகல் வந்ததாகக் கூறப்படும் ஒருவர், உறவினர் ஒருவர் மரணமானதாக பாலர் பாடசாலை ஆசிரியருக்கு அறிவித்து பிள்ளையை அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

முந்தல் பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயதான பெண் பிள்ளையொன்றே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக பிள்ளையின் தாயாரின் சகோதரர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கடத்தப்பட்ட பிள்ளை தொடர்பில் இதுவரை எவ்விதத் தகலும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment