Thursday, February 23, 2012

போலி பாஸ்போர்ட்டில் கொழும்பு செல்ல முயன்ற நீடாமங்கலத்தை சேர்ந்த பெண், கேரள வாலிபர் திருச்சி விமான நிலையத்தில் கைது!

Thursday, February 23, 2012
திருச்சி::போலி பாஸ்போர்ட்டில் கொழும்பு செல்ல முயன்ற நீடாமங்கலத்தை சேர்ந்த பெண், கேரள வாலிபர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். திருச்சி விமான நிலையத்தில் குடியேற்ற துறை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் விமான பயணிகளிடம் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பு செல்ல வந்த கேரளா பரக்கலாவை ளசேர்ந்த ராமகிருஷ்ணன் (41) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதித்தனர். அதில், மங்களூரை சேர்ந்த சையதுமுஜித் (41) என்ற பெயர், முகவரியில் போலி பாஸ்போர்ட் எடுத்து கொழும்பு செல்ல வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், ராமகிருஷ்ணனை ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போ லீசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் இலங்கையில் இருந்து வந்த விமான பயணிகளை சோதனையிட்டதில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த மதியழகன் மனைவி குமாரி (32) என்பவர் பாஸ்போர்ட்டில் போலி முத்திரை இருப்பது தெரியவந்தது. அவரும் ஏர்போர்ட் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment