Thursday, February 23, 2012சென்னை::திருவாரூர் மாவட்டத்தில் நடராஜன், திவாகரன் ஆதரவாளர்கள் 11 பேர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கிய பிறகு அவர்களது ஆதரவாளர்கள் யார் யார் என கண்டறிந்து கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நடராஜன், திவாகரன் ஆதரவாளர்கள் 11 பேரை அதிரடியாக நீக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்சியின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவரும், திருவாரூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான துரை.குபேந்திரன் (நிலமோசடி வழக்கில் நடராஜனுடன் கைது செய்யப்பட்டவர்), மாவட்ட இளைஞர் பாசறை துணைத் தலைவர் சுஜய், நீடாமங்கலம் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் தமிழ்செல்வன், ரிசியூர் ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், ரிஷியூர் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமேனன் (பெண்ணின் வீட்டை இடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்) மன்னார்குடி நகர்மன்ற 24வது வார்டு உறுப்பினர் ராசுப்பிள்ளை. மன்னார்குடி 24வது வார்டு செயலாளர் பக்கிரிசாமி, ரிஷியூர் மருதகணேசன், நீடாமங்கலம் காந்தி, வீர. சிவசங்கர், ரிஷியூர் வைத்தியநாதன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கட்சித் தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment