Wednesday, February 15, 2012பாங்காக்::டெல்லியில் பிரதமர் வீடு அருகே இஸ்ரேல் தூதரகம் மீது நடத்தப்பட்ட காந்த வெடிகுண்டு தாக்குதலுக்கும், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த 3 தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என பாங்காக்கிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தாக்குதலிலும் பயன்படுத்தப்பட்டுள்ள குண்டுகள் ஒரே மாதிரியானவை எனவும் அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே டெல்லியில் இஸ்ரேல் தூதரக தாக்குதலை நடத்திய ஆசாமி மோட்டார் சைக்கிளில் வந்ததாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
No comments:
Post a Comment