Wednesday, February 15, 2012சென்னை::தமிழக காவல்துறையை உலகின் மிகச்சிறந்த காவல்துறையாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னை, ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, நான் முதன் முறை முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்தே, தமிழகக் காவல் துறை தனக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லாமல் தனிச் சிறப்பு பெற்று திகழ வேண்டும் என்பதும்; அவ்வாறு தமிழகக் காவல் துறை திகழ்வதற்கு ஏதுவாக, உலகத் தரம் வாய்ந்த காவல் உயர் பயிற்சியகம் தமிழ்நாட்டில் நிறுவப்பட வேண்டும் என்பதும் எனது கனவாக இருந்தது.
அதன் அடிப்படையில், தமிழகக் காவல் துறை மிகச் சிறந்த காவல் துறையாக விளங்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை நான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போதெல்லாம் தொடர்ந்து எடுத்து வந்துள்ளேன்.
இதற்கும் மேலாக தமிழக காவல்துறையை உலகின் மிகச்சிறந்த காவல்துறையாக்குவதே தனது லட்சியம் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment