

Wednesday, February 15, 2012இலங்கை::எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் செய்துள்ளனர்.
மாளிகாவத்தையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் மருதானை வரை பேரணியாக பயணித்துள்ளது. இதன்போது மருதானை பகுதியில் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் செய்துள்ளனர்.
சிலாபம் துப்பாக்கிப் பிரயோகம் குறித்து விசாரணை!
சிலாபத்தில் இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
இத்துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த விசேட குழுவினர் சிலாபத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவத்தின்போது பொலிஸார் எவரும் காயமடையவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment