Wednesday, February 15, 2012சென்னை::முதல்வர் ஜெயலலிதா பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக வக்கீல் ஞானமுத்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்திலும், வெளியிலும் அவதூறான கருத்துக் களை வெளியிட்டுள் ளார். இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்தோம். இரண்டு வாரமாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு வில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி மாலா இன்று விசாரித் தார். மனுதாரர் சார்பாக வக்கீல் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, ÔÔவிஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யாதது குறித்தும், எங்கள் புகார் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும்ÕÕ என்றார். விஜயகாந்த் சார்பாக வக்கீல் நமோநாராயணன் ஆஜராகி, பதில் அளிக்க அவகாசம் கேட்டார். இதைக் கேட்ட நீதிபதி, ÔÔவழக்கு பதிவு செய்யாதது குறித்து போலீசார் நாளை பதில் அளிக்க வேண்டும்ÕÕ என உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment