Wednesday, February 15, 2012

நவனீதம்பிள்ளையின் கருத்து தொடர்பில் இலங்கை அதிருப்தி!

Wednesday, February 15, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளைஅண்மையில் வெளியிட்ட கருத்துக்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் ஆலோனைக் குழுவில் இலங்கை மேஜர்ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் நவனீதம்பிள்ளை விமர்சனப்பாங்கான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

நவனீதம் பிள்ளையின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனஅரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுக்களுக்காக நபர் ஒருவரை நிராகரிப்பதுநியாயமற்றது என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக் கிளை தெரிவித்துள்ளது.

இவ்வாறான விமர்சனங்கள் ஐக்கிய நாடுகளின் ஒழுக்க விதிகளுக்கும்புறம்பானது என சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment