Wednesday, February 15, 2012

அமெரிக்காவின் தீர்மானம் வரவேற்கத்தக்கது – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு!

Wednesday, February 15, 2012
இலங்கை::அமெரிக்காவின் தீர்மானம் வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரானதீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜதந்திரிகளான ரொபர்ட் ஒபிளக் மற்றம் மாரியா ஒடேரோ ஆகியோரின் கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன்தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் பிரச்சினைகளுக்கு சாதகமான முறையில் அணுகாமையேபிரதான சிக்கலாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா மட்டுமன்றி, ஏனைய நாடுகளும் உண்மையைக் கண்டறியும்ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெற்றிகரமாக அமுல்படுத்த வேண்டுமென்றே விரும்புகின்றன என அவர்குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் காலம்தாழ்த்து கொள்கைகளை பின்பற்றக் கூடாதஎ ன அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் தொடர்பில் கடந்த காலஅரசாங்கங்களின் கொள்கைகளினால், வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் பெரும்இடர்களை எதிர்நோக்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கபூர்வமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் கடந்தகால அரசாங்கங்கள் இழைத்த அதே தவறுகளை தற்போதைய அரசாங்கமும் மேற்கொள்ளக் கூடாது எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்பது குறித்துஇன்னமும் தமது கட்சி இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில முக்கியமான இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாது பாராளுமன்றத்தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டும் நோக்கில் பல முனைப்புக்கள்மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யக் கூடிய வகையில் எந்தவொரு காத்திரமான தீர்வுத் திட்டமும் முன்வைக்கப்படவில்லை எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது குறித்துதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் நிதானத்துடன் செயற்படும் என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment