Wednesday, February 15, 2012

போலியான நாணய தாள்களுடன் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பெங்களூரில் கைது!

Wednesday, February 15, 2012
பெங்களூர்::போலியான நாணய தாள்களுடன் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று இலங்கையர்கள் தப்பி சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட இலங்கையரிடம் இருந்து போலியான ஒரு லட்சத்து 50 ஆயிரம் இந்திய ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர குறித்த ஐந்து பேரும் பயணித்த இரண்டு கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment