Monday, February 27, 2012
இலங்கை::ஜேனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானத்தைக் கண்டித்து இன்று காலை ஏறாவூரில் இடம்பெற்ற கண்டனப் பேரணி நடாத்தப்பட்டுள்ளது. அதில் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவைக்கப்பட்டுள்ளனர்.
அப் பேரணியில் நகர முதல்வர் அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.எம். சுபைர், தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம். நஸீர் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் ஏராளமான பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் என மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் மாநாடு: காத்தான்குடியில் எதிர்ப்பு நிகழ்வுகள்!
ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக திட்டமிடப்பட்டிருக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமெரிக்காவை கண்டித்தும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று (27.02.2012) காத்தான்குடியில் கடைகள் மூடப்பட்டுள்துடன் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
1990 ம் ஆண்டு புலிகளலினால் மனிதப்படுகொலை மேற்கொள்ளப்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாயலில் து ஆபிராத்தனை என்பன இன்று காலை இடம் பெற்றது.
இதில் உலமாக்கள் முக்கியஸ்த்தர்கள் அரசியல் பிரமுகர்கள் சம்மேளன பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறப்புரையினை காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர் நிகழ்த்தினார்.
பிரதான வீதியில் பதாதைகளும் கட்டப்பட்டள்ளன.
No comments:
Post a Comment