Sunday, February 26, 2012இலங்கை::மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த வர்த்தகருக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைபேசி மூலம் குறித்த வர்த்தகருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதென மாத்தறை பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கப்பம் பெறுவதற்காக பொரளைக்கு வந்திருந்தபோது சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்படவர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து கப்பம் பெறும் குழுக்களை வழிநடத்திய சந்தேகநபரின் தந்தையென்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது கப்பமாக பெறப்பட்ட பணத்தை தமது வங்கிக்கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment