Sunday, February 26, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் சமயோசிதமானது –பசில் ராஜபக்ஷ!

Sunday, February 26, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொள்வதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்தத் தீர்மானம் சமயோசிதமானது எனபொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்கப்போவதில்லை என இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இந்தத் தீர்மானம் சமயோசிதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமர்வுகளில் பங்கேற்றிருந்தால் புலிகளினால்மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபதிலளித்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் அரசியல் பிரதிநிதிகளைப் போன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

எனவே புலிகளின் குற்றச் செயல்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டியபொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மனித உரிமைகளைமீறிச் செயற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு அரசாங்கம் நியாயம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

17000 முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு அளித்து மீளவும்சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகவும், உயர்பாதுகாப்புவலயங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஈழம் தொடர்பில் கனவுகாணுமானால் அது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதனை இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும் எனஅமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களை மீளவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கல்களில்ஆழ்த்தக் கூடாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment