Sunday, February 26, 2012சென்னை::மசாஜ் செய்வதாக இன்டர்நெட்டில் விளம்பரம் செய்து, விபசாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் பிடிபட்டனர். புரோக்கர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். மசாஜ் செய்யப்படும் என்று இணைய தளங்களில் விளம்பரம் செய்து, அந்த விளம்பரங்களை பார்த்து தொடர்பு கொள்வோரை அழைத்து, விபசாரத்தில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வரும் ‘கட்ஸ் என் கிளிட்ஸ்‘ என்ற மசாஜ் கிளப்பை தொடர்பு கொண்ட போலீசார், வாடிக்கையாளர் போல பேசினர். மறுமுனையில் பேசிய நபர், யுநவீன முறையில் மசாஜ் செய்யப்படும். விருப்பப்பட்டால் பெண்களோடு உல்லாசமாகவும் இருக்கலாம். அதற்கு ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும்ரு என்றார். அங்கு சென்ற போலீசார், மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர். அங்கிருந்த சோழிங்கநல்லூர் சீனிவாசன், காட்டுமன்னார்கோவில் ராம்குமார், சரவணன் ஆகிய 3 புரோக்கர்களையும், 5 பெண்களையும் கைது செய்தனர்.
No comments:
Post a Comment