Sunday, February 26, 2012

ஈரான் ராணுவம் எச்சரிக்கை தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் சிதைந்து விடும்!

Sunday, February 26, 2012
டெஹ்ரான்::ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், இஸ்ரேல் சிதைந்துவிடும் என்று ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் அகமது வாஹிதி கடுமையாக எச்சரித்தார். அணுஆயுதங்கள் தயாரிப்பதாகவும், தங்கள் நாட்டு பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து புகார் கூறி வருகிறது. அணு ஆயுத விவகாரத்தில், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்று இஸ்ரேல் மிரட்டி வருகிறது. இந்நிலையில், தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் சிதைந்து விடும் என்று ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அகமது நேற்று எச்சரித்தார். இதுகுறித்து ஈரான் டிவிக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறுகையில், ஈரான் அணுசக்தி திட்டங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறது. அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கான பின் விளைவுகளை அந்த நாடு நிச்சயம் சந்திக்கும். தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் சிதைந்துவிடும் என்று எச்சரித்தார். ஆனால், இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், எந்த வகையான நடவடிக்கையை ஈரான் எடுக்கும் என்பதை அவர் கூறவில்லை.

No comments:

Post a Comment