Sunday, February 26, 2012
கடலூர்::கடலூர் வாலிபருக்கும், பிலிப்பைன்ஸ் பெண் ணுக்கும் தமிழ்முறைப்படி திருவந்திபுரம் பெருமாள் கோயிலில் இன்று திருமணம் நடந்தது. அறிவுச்செல்வி என்று பெயர் சூட்டிக்கொண்ட காதலியின் விருப்பத்தை ஏற்று மணமகன் மொட்டை கோலத்தில் தாலி கட்டினார். கடலூர் மாவட்டம் கடலூர் அருகே நடுவீரப்பட்டு என்.மூலக்குப் பத்தை சேர்ந்தவர் அன்புச்செல்வன். சிங்கப்பூரில் உள்ள ஹாமோன் என்ற நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்க்கிறார். நண்பர்களுடன் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது எட்னா கிறிஸ்டோபல் என்ற பெண்ணை சந்தித்தார். எம்.பி.ஏ. படித்த அவர் வங்கி மேலாளராக பணியாற்றுபவர். இருவருக்கும் காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். மதம் மாற மறுத்த அன்புச்செல்வன், தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்று தன் விருப்பத்தையும் தெரிவித்தார். கடலூர் திருவந்திபுரத்தில் உள்ள பெருமாள் கோயிலில் இவர்கள் திருமணம் இன்று தமிழ்முறைப்படி நடந்தது. மணமகள் எட்னா தழையத் தழைய பட்டுப் புடவை கட்டியிருந்தார். கையில் மருதாணி, கழுத்தில் தங்க நகைகள், முத்துமணி மாலை, தலையில் நெற்றிச்சுட்டி, இடுப்பில் ஒட்டியா ணம் என அச்சு அசலாக தமிழ்ப் பெண் போல அலங்காரம் செய்து வந்தார். அவரது சித்தி பாஷியாஷா, சகோதரி இமீ ஆகியோர் தாம்பாளத்தில் முளைப்பாரி ஏந்தி வந்தனர்.
பின்னர் திருமண சடங்குகள் தொடங்கின. புரோகிதர் மந்திரங்கள் சொல்ல, அதன் அர்த்தத்தையும் சடங்குகளுக்கான விளக்கத்தையும் மணமகன் அன்புச்செல்வனிடம் ஆங்கிலத்தில் கேட்டு தெரிந்துகொண்டு அவற்றை செய்தார் எட்னா. உற்றார், உறவினர், பெரியவர்கள் அட்சதை தூவி வாழ்த்த, எட்னாவின் கழுத்தில் அன்புச்செல்வன் தாலி கட்டினார். மணமகள் எட்னா கூறும்போது, ‘அன்புச்செல்வனின் உண்மையான அன்பு, அக்கறை, காதலை வெளிப்படுத்திய விதம் பிடித்திருந்தது. இன்று நான் தமிழ்நாட்டு மருமகள். அழகாக எனக்கு தமிழில் ஒரு பெயர் வையுங்கள் என்று கேட்டேன். அறிவுச்செல்வி என்று எனக்கு பெயர் வைத்திருக்கிறார். இறைவனுக்கு நன்றி’ என்றார். அன்புச்செல்வன் ஒருமுறை மொட்டையடித்துக் கொண்டாராம். அது எட்னாவுக்கு ரொம்ப பிடித்திருந்ததாம். அவரது ஆசையை ஏற்று, திருமணத்தின்போதும் அன்புச்செல்வன் மொட்டை அடித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment