Sunday, February 26, 2012

வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலி சந்தேகநபர்கள் சிலரை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது!

Sunday, February 26, 2012
இலங்கை::வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புலி சந்தேகநபர்கள் சிலரை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இடப்பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் 50 கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியா சிறைச்சாலையிலுள்ள சிலர் சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைதி ஒருவரிடம் கையடக்க தொலைபேசியொன்று உள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் மீது கைதிகள் தண்ணீர் பிரயோகம் நடத்தியதாக சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து கல் வீச்சும் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலி சந்தேகநபர்கள் சிலரே தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரி கூறியிருந்தார்.

No comments:

Post a Comment