Sunday, February 26, 2012

பாஜ தலைவர்கள் வேடதாரிகள் : சோனியா கடும் தாக்கு!

Sunday, February 26, 2012
பனாஜி::பா.ஜ. தலைவர்கள் கபட வேடதாரிகள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக தாக்கி பேசினார். கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 3-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அஙகு காங்கிரஸ், பாஜ இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. நேற்று படோர்தா தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: ஊழல், கறுப்பு பணம் பற்றி பா.ஜ. பேசி வருகிறது. அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது கறுப்பு பணத்தை ஏன் மீட்கவில்லை. அத்வானி துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். கறுப்பு பணத்தை மீட்க அவர் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், காங்கிரஸ் அரசு ஊழலுக்கு எதிராக கடுமையாகவும், அக்கறையோடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றவிடாமல் பா.ஜ. மற்றும் சில கட்சிகள் தடுத்தன. பா.ஜ. தலைவர்கள் கபட வேடதாரிகள். வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். சட்டத்துக்கு மேல் யாரும் கிடையாது. ஊழல் வழக்குகளை விசாரிக்க, விசாரணை அமைப்புகளுக்கு சுதந்திரம் அளிப்பது அவசியமானது. இவ்வாறு சோனியா பேசினார்.

No comments:

Post a Comment