Sunday, February 26, 2012இலங்கை::இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த மேலும் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தற்போது தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களின் ஐந்து மீன்பிடி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நடவடிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை இந்தியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான இலங்கை மீனவர்கள் 25 பேர் இன்று கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
அண்மையில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த நாட்டின் கரையோர பாதுகாப்பு பிரிவினர் குறித்த மீனவர்களை கைது செய்திருந்ததாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
விடுதலை செய்யப்பட்டுள்ள மீனவர்களை காங்கேசன்துறையை அண்மித்த கடற்பரப்பில் வைத்து இந்திய அதிகாரிகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இதனிடையே இலங்கையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையான மூன்று மீனவர்களையும் படகொன்றையும் கடற்படையினர் இந்திய கரையோலப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கபடவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment