Sunday, February 26, 2012
காத்மாண்டு::நேபாளத்தில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில், ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடத்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக திருமலையில் இருந்து ஏழுமலையான் சுவாமி சிலை எடுத்துச் செல்லப்பட்டது. தேவஸ்தான தலைவர் கனுமுரி பாபிராஜு தலைமையில் 80க்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையான் மற்றும் மற்ற சுவாமி சிலைகளுடன் நேற்று காத்மாண்டு வந்தடைந்தனர். பின்னர் நகரின் முக்கிய பகுதியில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு, திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்தியாவுக்கு வெளியில் திருப்பதி ஏழுமலையான சிலை எடுத்து வரப்பட்டது இதுவே முதல் முறை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். ஒரு நாள் முழுவதும் பக்தர்களின் தரிசனத்துக்காக சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு பின்னர் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் திருமலைக்கு எடுத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

No comments:
Post a Comment