Thursday, February 23, 2012இலங்கை::ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா தொடர்பில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை அமெரிக்க தொடர்ந்து அவதானித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜனநாயக செயற்பாடுகள் திணைக்களத்தின் மேலதிக செயலாளர் மைக்கல் எச். பொஸ்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்தில் வெளியான அறிக்கை ஒன்று தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை மற்றும் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் என்பன, இலங்கையின் கருத்துச் சுதந்திரம் மற்றும் நீதிக் கட்டமைப்பை சவாலுக்கு உட்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment