Thursday, February 23, 2012
சென்னை::வங்கி கொள்ளையர்களை போலீசார் சுற்றி வளைத்தபோது, சினிமாவை மிஞ்சும் அளவுக்கு இரு தரப்பினருக்கும் ஒரு மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. குண்டு பாய்ந்து இன்ஸ்பெக்டர்கள் காயம் அடைந்ததால், வேறு வழியின்றி தனிப்படை போலீசார் என்கவுன்டர் நடத்தியுள்ளனர். வேளச்சேரியை சேர்ந்த பார்வதி என்பவரின் தம்பி முருகன், கிண்டி போலீஸ் நிலையத்துக்கு வந்து பத்திரிகையில் வெளியான படத்தில் உள்ள கொள்ளையன் தனது அக்கா வீட்டில் வாடகைக்கு தங்கியிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அந்த வீடு உள்ள ஏ.எல்.முதலி தெருவின் அமைப்பு, வீட்டின் அமைப்பு, வீட்டுக்குள் செல்லும் வழி உள்பட எல்லா விவரங்களையும் போலீசார் கேட்டறிந்தனர். பின்னர் கொள்ளையர்களை பிடிப்பது குறித்து திட்டம் வகுக்கப்பட்டது. உடனடியாக வீட்டின் படம் வரையப்பட்டு, யார் எங்கு செல்வது, எப்படி செல்வது என்று திட்டம் தீட்டினர்.
கொள்ளை கும்பல் தூங்கும் நேரத்தில் பிடிக்க வியூகம் வகுத்தனர். அதற்காக நள்ளிரவு வரை காத்திருந்தனர். நள்ளிரவு ஒரு மணிக்கு அந்த பகுதிக்கு போலீசார் சென்றனர். கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவை வெளிப்பக்கமாக பூட்டினர். கதவு பூட்டும் சத்தம் கேட்டதும் விழித்துக் கொண்ட கொள்ளையர்கள், ‘யார் கதவை பூட்டுவது’ என்று கேட்டுள்ளனர். வெளியில் இருந்து பதில் இல்லாததால் வீட்டு உரிமையாளர் பார்வதிக்கு போன் செய்து, Ôஎங்கள் வீட்டுக்கு வெளியே யாரோ நிற்கிறார்கள். அவர்கள் யார், எதற்காக கதவை பூட்டுகிறார்கள்Õ என்று கேட்டுள்ளனர். அதற்கு பார்வதி, Ôஎங்களுக்கு எதுவும் தெரியவில்லைÕ என்று கூறிவிட்டார். இதற்கிடையே, வீட்டுக்குள் பொருட்களை அவசர அவசரமாக எடுக்கும் சத்தம் கேட்டது. கொள்ளையர்கள் தாக்குதலுக்கு தயாராகிறார்கள் என்பதை யூகித்த போலீசார் உஷாராயினர். ஜன்னல் கண்ணாடியை உடைத்த போலீசார், வீட்டை முற்றுகையிட்டு விட்டதாகவும், சரணடைய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். சிறிது நேரம் உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. திடீரென வீட்டுக்குள் இருந்தவர்கள் போலீசாரை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் ரவி, கிறிஸ்டியன் ஜெயசீல் காயமடைந்தனர். இதையடுத்து போலீசாரும் ஜன்னல் வழியாக திருப்பிச் சுட்டனர்.
வெளியில் ஒரு பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் போலீசார் சிலர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். துப்பாக்கியால் சுட்டபடி முன்னேறினர். சினிமாவை மிஞ்சும் அளவுக்கு சுமார் ஒரு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. போலீசார் சுட்டதில் வீட்டில் இருந்த 5 பேரும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர். துப்பாக்கிச் சூடு நடந்த இடம் போர்க்களம் போல ஆனது. நள்ளிரவில் துப்பாக்கி சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் பதறியடித்து எழுந்து வெளியில் வந்தனர். போலீசார் குவிந்திருப்பதை பார்த்து என்ன நடக்கிறது என்று தெரியாமல் பரபரப்பு அடைந்தனர். வங்கி கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதும் அவர்கள் இவ்வளவு நாட்கள் தங்கள் பகுதியில்தான் பதுங்கி இருந்தனர் என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
என்கவுன்டர் நடத்திய தனிப்படை
அடையாறு துணை கமிஷனர் சுதாகர், கிண்டி உதவி கமிஷனர் மாணிக்கவேல், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கண்ணன். இன்ஸ்பெக்டர்கள்: ரவி (துரைப்பாக்கம்), கிறிஸ்டியன் ஜெயசீல் (தேனாம்பேட்டை), சுந்தரேசன் (மயிலாப்பூர்), சம்பத் (கொருக்குப்பேட்டை), சப் இன்ஸ்பெக்டர்கள்: சத்தியலிங்கம் (வேளச்சேரி), லோகநாதன் (கிண்டி), சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள்: செல்வராஜ், ஏசுபாதம், அம்ரூஸ், தலைமை காவலர் சுவாமிநாதன், போலீஸ்காரர் அலாவுதீன்.
இன்று காலை தப்பிக்க கொள்ளையர்கள் திட்டம்
பார்வதியின் வீட்டுக்கு கடந்த டிசம்பர் மாதம்தான் 5 கொள்ளையர்களும் வாடகைக்கு குடிவந்துள்ளனர். தாங்கள் வியாபாரம் செய்வதாகவும் ஒரு மாதம் சென்னையில் தங்கி வியாபாரம் செய்யப் போவதாகவும் அதற்காக வாடகைக்கு வீடு வேண்டும் என்றும் பார்வதியிடம் கூறியுள்ளனர். ஒரு மாத வாடகை ரூ.5 ஆயிரம் தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பி அவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். பகலில் வியாபாரத்துக்கு செல்வதுபோல வெளியில் சென்ற கொள்ளையர்கள், பல இடங்களுக்கும் சென்று வங்கிகளை நோட்டமிட்டுள்ளனர். பின்னர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். கடந்த மாதம் மீண்டும் சென்னை வந்தவர்கள், பார்வதி வீட்டிலேயே வாடகைக்கு தங்கினர். திட்டமிட்டபடி கடந்த மாதம் 23-ம் தேதி பெருங்குடி வங்கியில் ரூ.25 லட்சம் கொள்ளை அடித்துள்ளனர். மற்றவர்களுக்கு சந்தேகம் வராத வகையில் அவர்கள் சர்வ சாதாரணமாகவே நடமாடி உள்ளனர். கொள்ளை நடந்த 2 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு 5 பேரும் சென்றனர். சொந்த ஊருக்கு சென்றவர்கள், கொள்ளையடித்த ரூ.25 லட்சத்தை கொடுத்துவிட்டு சில நாட்கள் அங்கு தங்கியுள்ளனர். மீண்டும் இந்த மாத தொடக்கத்தில் சென்னை வந்துள்ளனர். கீழ்கட்டளை வங்கியில் கொள்ளை நடந்த பிறகு 5 பேரும் வெளியில் தலைகாட்டவில்லை. வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர். இன்று காலை சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். போலீசார் நேற்று நள்ளிரவு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்காவிட்டால் கொள்ளையர்கள் தப்பியிருப்பார்கள்.
வீடு முழுக்க ரத்தம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 3 லேன் பிளாட் நம்பர் 335ல் பார்வதி தன் தம்பி முருகனுடன் முதல் தளத்தில் வசிக்கிறார். 2வது தளத்தில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருக்கிறது. கீழ் தளத்தில்தான் வங்கி கொள்ளையர்கள் 5 பேர் தங்கியிருந்தனர். மாதம் ரூ.5,000 வாடகை கொடுத்துள்ளனர். அந்த வீடு ஒரு கிச்சன், ஒரு ஹால், ஒரு பெட்ரூம் கொண்டது. துப்பாக்கி சண்டைக்கு பிறகு, வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சியளித்தது.
தெருவை கட்டுக்குள் வைத்த போலீஸ்
வங்கி கொள்ளையர்கள் தங்கியிருந்த தெரு முழுவதையும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். கார், பைக் போன்ற வாகனங்களை தெருவுக்குள் அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் நடந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. காலை 5.30 மணிக்கு பிறகுதான், பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்...
போலீஸ் கமிஷனர் திரிபாதி, சென்னையில் இன்று மதியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வங்கி கொள்ளையர்கள் வேளச்சேரியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அடையாறு துணை கமிஷனர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். கொள்ளையர்கள் அங்கு இருப்பது தெரிந்தது. போலீசார் சுற்றிவளைத்தது தெரிந்ததும் கொள்ளையர்கள் முதலில் துப்பாக்கியால் சுட தொடங்கினர். பலமுறை எச்சரித்தும் சுடுவதை அவர்கள் நிறுத்தாததால் பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 5 கொள்ளையர்களும் இறந்து விட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதனால் முழு விவரங்களை இப்போது என்னால் கூற இயலாது. கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து 4 வாக்காளர் அடையாள அட்டைகள், ஒரு டிரைவிங் லைசென்சை கைப்பற்றி உள்ளோம். 4 பேர் பீகாரை சேர்ந்தவர்கள். ஒருவன் மேற்கு வங்கத்தை சேர்ந்தவன் என தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் இன்று சென்னையை விட்டு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளையர்கள் பற்றி துப்பு கொடுத்தது யார் என்று கூற முடியாது. அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. என்கவுன்டர் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்படும். சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையர்களின் கூட்டாளிகள் வேறு யாராவது தலைமறைவாக இருக்கிறார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. என்கவுன்டர் நடந்த வீட்டுக்கு சீல் வைத்துள்ளோம். இவ்வாறு கமிஷனர் திரிபாதி கூறினார்.இன்று காலை தப்பிக்க கொள்ளையர்கள் திட்டம்பார்வதியின் வீட்டுக்கு கடந்த டிசம்பர் மாதம்தான் 5 கொள்ளையர்களும் வாடகைக்கு குடிவந்துள்ளனர். தாங்கள் வியாபாரம் செய்வதாகவும் ஒரு மாதம் சென்னையில் தங்கி வியாபாரம் செய்யப் போவதாகவும் அதற்காக வாடகைக்கு வீடு வேண்டும் என்றும் பார்வதியிடம் கூறியுள்ளனர். ஒரு மாத வாடகை ரூ.5 ஆயிரம் தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பி அவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். பகலில் வியாபாரத்துக்கு செல்வதுபோல வெளியில் சென்ற கொள்ளையர்கள், பல இடங்களுக்கும் சென்று வங்கிகளை நோட்டமிட்டுள்ளனர். பின்னர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். கடந்த மாதம் மீண்டும் சென்னை வந்தவர்கள், பார்வதி வீட்டிலேயே வாடகைக்கு தங்கினர். திட்டமிட்டபடி கடந்த மாதம் 23-ம் தேதி பெருங்குடி வங்கியில் ரூ.25 லட்சம் கொள்ளை அடித்துள்ளனர். மற்றவர்களுக்கு சந்தேகம் வராத வகையில் அவர்கள் சர்வ சாதாரணமாகவே நடமாடி உள்ளனர். கொள்ளை நடந்த 2 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு 5 பேரும் சென்றனர். சொந்த ஊருக்கு சென்றவர்கள், கொள்ளையடித்த ரூ.25 லட்சத்தை கொடுத்துவிட்டு சில நாட்கள் அங்கு தங்கியுள்ளனர். மீண்டும் இந்த மாத தொடக்கத்தில் சென்னை வந்துள்ளனர். கீழ்கட்டளை வங்கியில் கொள்ளை நடந்த பிறகு 5 பேரும் வெளியில் தலைகாட்டவில்லை. வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர். இன்று காலை சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். போலீசார் நேற்று நள்ளிரவு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்காவிட்டால் கொள்ளையர்கள் தப்பியிருப்பார்கள்.வீடு முழுக்க ரத்தம்தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 3 லேன் பிளாட் நம்பர் 335ல் பார்வதி தன் தம்பி முருகனுடன் முதல் தளத்தில் வசிக்கிறார். 2வது தளத்தில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருக்கிறது. கீழ் தளத்தில்தான் வங்கி கொள்ளையர்கள் 5 பேர் தங்கியிருந்தனர். மாதம் ரூ.5,000 வாடகை கொடுத்துள்ளனர். அந்த வீடு ஒரு கிச்சன், ஒரு ஹால், ஒரு பெட்ரூம் கொண்டது. துப்பாக்கி சண்டைக்கு பிறகு, வீடு முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சியளித்தது. தனிப்படை டீம்அடையாறு துணை கமிஷனர் சுதாகர், கிண்டி உதவி கமிஷனர் மாணிக்கவேல், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கண்ணன். இன்ஸ்பெக்டர்கள்: ரவி (துரைப்பாக்கம்), கிறிஸ்டியன் ஜெயசீல் (தேனாம்பேட்டை), சுந்தரேசன் (மயிலாப்பூர்), சம்பத் (கொருக்குப்பேட்டை), சப் இன்ஸ்பெக்டர்கள்: சத்தியலிங்கம் (வேளச்சேரி), லோகநாதன் (கிண்டி), சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள்: செல்வராஜ், ஏசுபாதம், அம்ரூஸ், தலைமை காவலர் சுவாமிநாதன், போலீஸ்காரர் அலாவுதீன்.5 பேர் என்கவுன்டர் தமிழகத்தில் முதல் முறைசென்னையில் இதுவரை..1996: ஆசைத்தம்பி, கபிலன்1998: கைபாம் மோகன்1999: மிலிட்டரி குமார்2002: சஞ்சய் காட்டியா, முருகேசன் காக்கா ரமேஷ், ஸ்டாலின், சுரா (எ) சுரேஷ் (இவர்கள் 5 பேரும் தனித்தனியாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.) * ராஜாராம், புதுக்கோட்டை சரவணன் * சின்னமாரி உள்பட 3 பேர் 2003: அயோத்தி குப்பம் வீரமணி, வெங்கடேச பண்ணையார்2005: ரமேஷ், மணிகண்டன்2006: நாகூரான், பங்க் குமார்2008: வெள்ளை ரவி, குணா2008: ஜெயக்குமார், சுடலை மணி2008: பாபா சுரேஷ்2010: திண்டுக்கல் பாண்டியன், வேலுமாவட்டங்களில்..மதுரை மாரிமுத்து (2007)திருச்சி பாம் பாலாஜி (2008)சிவகாசி சுந்தரமூர்த்தி (2008)கும்பகோணம் மிதுன்காஞ்சிபுரம் குரங்கு செந்தில் (2009)காஞ்சிபுரம் கொற நடராஜன் (2010)கோவையில் சிறுமி முஸ்கான், சிறுவன் ரித்திக்கை கடத்தி கொன்ற வழக்கில் பள்ளி வேன் டிரைவர் மோகன கிருஷ்ணன். (2010)மயிலம் அசோக்குமார் (2010)சாத்தூர் குமார்எல்லா என்கவுன்டரிலுமே தனியாகவோ, 3 பேரை மட்டுமோ சுட்டுக் கொன்றனர். ஆனால் போலீசார் பிடியில் இருந்து தப்பி சென்ற தீவிரவாதி இமாம் அலி மற்றும் அவருடன் இருந்த 4 பேர், தமிழக போலீசாரால் பெங்களூரில் உள்ள ஒரு வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், தமிழகத்தில் 5 பேர் ஒரே நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது இதுதான் முதல் முறை.கொள்ளையர்களின் முகவரி1. னோத் குமார், தந்தை மாத்னாத்ஷா, பத்துக்கா, பாட்னா, பீகார்2. சந்திரகாரே, தந்தை கிரிபாலி ரே, மாஜிபூர், பத்துக்கா ,பாட்னா3. ஹரிஷ் குமார், தந்தை பாஞ்ச்ரே, ரகோப்பர், வைஷாலி, பீகார்4. வினய் பிரசாத், தந்தை ஜாமுன் பிரசாத், நாலந்தா, பீகார்5. அபய்குமார், தந்தை விஜய் சிங், சிக்பூர், ஹவுரா, மேற்கு வங்கம்.போலீஸ் வேனில் உடல்கள்சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை தனித்தனியாக போர்வையால் சுற்றியிருந்தனர். அதை போலீஸ் வேனில் ஏற்றி, இயந்திர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால், திடீரென்று அந்த திட்டத்தை மாற்றி, உடல்களை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் லட்சுமி ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.கொள்ளையரை சுட்ட கமாண்டோ படைவங்கி கொள்ளையர்கள் துப்பாக்கி வைத்திருப்பது தெரிந்ததால், அவர்களை பிடிக்க போலீசாரும் கொள்ளையர்களை பிடிக்க துப்பாக்கியுடன் சென்றனர். மேலும் அதிநவீன துப்பாக்கிகளை கையாளும் பயிற்சி பெற்ற கமாண்டோ படையை சேர்ந்த 4 பேரையும் அழைத்துச் சென்றனர். அவர்கள்தான் கொள்ளையர்களை சரமாரியாக சுட்டனர். இதனால், 5 பேரும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.டைரி சிக்கியதுகொள்ளை கும்பலின் தலைவனான வினோத்குமார், எஸ்ஆர்எம் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தவர். படித்துக் கொண்டே வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை கல்லூரியில் சேர்த்து விட்டு கமிஷன் வாங்கும் புரோக்கராகவும் பணியாற்றி வந்துள்ளார். தேர்வில் தேர்ச்சி பெறாததால் சென்னையில் தங்கி கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்து விடுவதை தொழிலாகவே பார்த்து வந்துள்ளார். சக மாணவர்களுடன் அடிக்கடி தகராறு செய்வாராம். பலரை கடத்திச் சென்று மிரட்டியுள்ளார். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வினோத்குமார், மேலும் சிலரை தன்னுடன் சேர்த்துக் கொண்டு இப்போது வங்கியில் கொள்ளையடித்துள்ளார்.வினோத்குமாரின் டைரியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் தனக்கு நெருக்கமாக இருந்தவர்களின் பெயர், அவர்களது செல்போன் எண், முகவரிகளை எழுதி வைத்துள்ளார். அவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.ரூ.25 லட்சம் எங்கே?கடந்த மாதம் 23-ம் தேதி பெருங்குடியில் உள்ள வங்கியில் ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த பணத்தை அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு கொண்டு சென்று கொடுத்துவிட்டு மீண்டும் சென்னை வந்துள்ளனர். அந்தப் பணம் யாரிடம் உள்ளது என போலீசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர். பணம் முழுவதும் விரைவில் மீட்கப்படும் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வேலை, பள்ளிக்கு ‘மட்டம்’ பீதியில் உறைந்த வேளச்சேரி மக்கள்சென்னை : என்கவுன்டர் நடந்த வேளச்சேரி நேரு நகர் பகுதி மக்கள் இன்னும் பீதியில் இருந்து மீளவில்லை. பலர் இன்று வேலைக்கு செல்லவில்லை. பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பவில்லை.கொள்ளையர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் யசோதா கூறுகையில், ‘‘ஐந்து பேரும் யாரிடமும் பேச மாட்டார்கள். வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே வீட்டுக்கு வருவார்கள். இரவு முழுவதும் போனில் பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் இந்தியில் பேசியதால் எனக்கு எதுவும் புரியவில்லை. ஒருவன் மட்டும் பல்சர் பைக் வைத்திருந்தான். அதையும் அதிகம் பயன்படுத்தவில்லை. நள்ளிரவில் குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டதும் பயந்து போய் கதவை திறந்து எட்டிப் பார்த்தேன். ஏராளமான போலீசார் நின்றிருந்தனர். வெளியே எட்டிப் பார்க்கக் கூடாது என்று போலீசார் கூறிவிட்டனர். பயத்தில் எனது குழந்தைகளை இன்று பள்ளிக்கு அனுப்பவில்லை’’ என்றார். எதிர் வீட்டில் வசிக்கும் பரமேஸ்வரி: இரவு 11 மணி வரை சீரியல் பார்த்துவிட்டு கதவை பூட்ட வந்தேன். எதிர் வீட்டை போலீசார் முற்றுகையிட்டு நின்றனர். பயத்தில் கதவை பூட்டி விட்டேன். ஒரு மணி நேரத்துக்கு பிறகு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. பயத்தில் வெளியே வரவில்லை. காலையில் வந்து பார்த்தேன். எங்கள் வீட்டுக்கு எதிரிலேயே இவ்வளவு பெரிய கொள்ளையர்கள் தங்கி இருந்தது நெஞ்சை படபடக்க வைத்தது. நானும் கணவரும் வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பவில்லை. பின் வீட்டில் வசிக்கும் ராஜேஸ்வரி: சொந்த ஊர் வேலூர். 4 மாதம் முன்புதான் இங்கு வந்து குடியேறினோம். 5 பேரில் கொள்ளை கும்பல் தலைவன் மட்டும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டே இருப்பான். நேற்று மாலை பத்திரிகையில் வெளிவந்த கொள்ளை கும்பல் தலைவன் புகைப்படத்தை பார்த்தபோது எனது வீட்டின் பக்கத்தில் வசிப்பவர் முகம் போல் இருந்தது. நமக்கு ஏன் வீண் வம்பு என்று தூங்கி விட்டேன். காலையில் வெளியே வந்து பார்த்த போதுதான் கொள்ளையர்களை போலீசார் சுட்டுக் கொன்றது தெரிந்தது. இப்பதான் நிம்மதியாக இருக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.என்கவுன்டர் நடந்த வீட்டை பார்க்க மக்கள் ஆர்வம்ஏஎல் முதலி 2-வது தெருவில் வங்கிக் கொள்ளையர்களை போலீசார் என்கவுன்டர் செய்த தகவல் பரவியதும் அதிகாலை முதல் ஏராளமானோர் அந்த வீட்டு முன்பு திரண்டனர். ஏஎல் முதலி 1, 2, 3 தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் என்கவுன்டர் நடந்த இடத்தை பார்க்க ஆர்வத்துடன் ஓடி வந்தனர். போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து யாரையும் உள்ளே விடவில்லை. பொதுமக்கள் திரண்டதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதியில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன.என்கவுன்டர் சக்சஸ்.. ஆனாலும் சந்தேகங்கள்!துப்பாக்கி சண்டையில் கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அதில் 2 இன்ஸ்பெக்டர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறினர். கொள்ளையர்களின் தலை, கை, முகம், கால் என்று பல இடங்களில் குண்டு துளைத்திருக்கிறது. ஆனால் சுவரில் ஒரு சில இடங்களில் மட்டுமே குண்டு பட்ட அடையாளங்கள் உள்ளன. அந்த வீட்டில்தான் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததை உறுதி செய்ய முடிகிறது. ஒருவழியாக கொள்ளையர்கள் என அடையாளம் காணப்பட்ட 5 பேரை சுட்டுக் கொன்றதில், சென்னையில் நிம்மதி பரவியிருக்கிறது.என்கவுன்டர் நிகழ்த்தப்பட்ட வேளச்சேரி ஹவுசிங் போர்டு, அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை பகுதிகளில் விடிய விடிய சுற்றிவந்த ‘தமிழ்முரசு’ நிருபர் குழுவினரிடம் மக்கள் தரப்பில் பகிர்ந்து கொண்ட சில சந்தேகங்கள்:* போலீசாருடன் நடந்த மோதலில்தான் கொள்ளையர் சுட்டுக் கொல்லப்பட்டார்களா? அல்லது சரண் அடைந்தவர்களிடம் விசாரணையை முடித்துவிட்டு போலீசார் சுட்டுக் கொன்றார்களா? * இறந்தது உண்மையான குற்றவாளிகள்தானா? அதை உறுதிப்படுத்த போலீஸ் வசம் இருக்கும் ஆதாரங்கள் என்ன?* கும்பல் தலைவனின் போட்டோவை மட்டும் ரிலீஸ் செய்த போலீஸ், அன்றைய தினம் இரவிலேயே 5 பேரையும் அடையாளம் கண்டுபிடித்து, சுட்டுக் கொன்றது எப்படி?* துப்பாக்கி முனையில் சென்னையையே கதிகலங்க வைத்த வங்கி கொள்ளை சம்பவத்தில், 5 பேரை அடையாளம் கண்ட போலீஸ், ஒருவரை கூட உயிருடன் பிடிக்க முயற்சிக்காதது ஏன்?* மிகப் பெரிய கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர் நெட்வொர்க் பற்றி அறிந்து கொள்வதில் போலீஸ் ஆர்வம் காட்டாதது ஏன்?* கீழ்கட்டளை வங்கியில் கொள்ளை போன பணம் பற்றி மட்டும் தற்போது பேசும் போலீசார், பரோடா வங்கியில் கொள்ளை போன பணத்தைப் பற்றி வாய் திறக்காதது ஏன்?
No comments:
Post a Comment