Thursday, February 23, 2012நிவ்யோர்க்::ஐக்கிய நாடுகள் சபை விலக்கியது? – இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான உதவி பிரதிநிதி சவேந்திரசில்வா மறுக்கிறார்:-
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையினர் தொடர்பில் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் பணிகளில் இருந்து இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான உதவி பிரதிநிதி சவேந்திரசில்வா தடுக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி பொது செயலாளர் லூயிஸ் ப்ரெசெட்டை மேற்கோள் காட்டி, ஏ.எப்.பி இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய போது, சவேந்திரசில்வாவின் அங்கத்துவம் ஆலோசனைக் குழுவுக்கு அவசியம் அற்றது என்று ;தெரிவிக்கப்பட்டதாக, ஆலோசனைக்குழுவின் தலைவரும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் உதவிசெயலாளருமான லூயிஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைதிகாப்பு படைக்கான ஆலோசனை குழு கூட்டம் நேற்று நிவ்யோர்க்கில் இடம்பெற்றது.
இதில் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்களும், உறுப்பு நாடுகளால் பரிந்துரைக்கப்பட்ட 5 உறுப்பினர்களுமாக 10 பேர் பங்கேற்றனர்.
இதில் சவேந்திரசில்வாவும் உள்ளடங்கி இருந்தார்.
இந்த நிலையில் குழுவில் இடம்பெற்ற எந்த ஒரு உறுப்பினரும், சவேந்திரசில்வாவுடன் கலந்துரையாடவில்லை.
அத்துடன் குழுவினால் கலந்துரையாடப்பட்ட எந்த விடயம் தொடர்பிலும், சவேந்திரசில்வாவுகு;க எந்த ஆவனங்களும் வழங்கப்படவில்லை என குழுவில் அங்கம் வகிக்கும் கனேடிய ராஜதந்திரி ஒருவரை மேற்கோள்காட்டி, ஏ.எப்.பி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏ.எப்.பியின் இந்த செய்தி தொடர்பில், எமது செய்திப்பிரிவு நிவ்யோர்க்கில் இருக்கும், ஐக்கிய நாடுகளுக்கான துணை பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவிடம் தொடர்பு கொண்டு வினவிய போது இந்த செய்தியில் உண்மை இல்லை என்று குறிப்பிட்டார்.
இன்றும் நாளையும் குறித்த ஆலோசனை குழுவின் கூட்டம் இடம்பெறும் போது, இதில் தாம் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்த அவர், நாளை இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment