Sunday, February 26, 2012ஜெனீவா::ஜெனீவா நகரிற்கு சென்றிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று ஆபிரிக்க நாடுகளுக்கான விசேட விஜயம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் அமர்வை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 ஆபிரிக்க நாடுகளுடன் கலந்துரையாடுவதற்காகவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மனிதவுரிமைகள் அமர்வில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையை முறியடிக்கும் வகையில் தமக்கு ஆதரவாக ஆபிரிக்க நாடுகள் செயற்பட வேண்டும் என அவர் கோருவதே இதன் நோக்கமாகும்,
இந்தநிலையில், நாளையதினம் மனிதவுரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாளையதினம் இலங்கை நேரப்படி, பிற்பகல் 3 மணியளவில் நாட்டின் மனிதவுரிமைகள் தொடர்பான விளங்கங்களை ஆணைக்குழு அமர்வில் முன்வைக்கவுள்ளார்.
இதனிடையே, இலங்கையின் தூதுக்குழுவினர், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதன் பிள்ளையுடனும், கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்..
No comments:
Post a Comment