Sunday, February 26, 2012நிவ்யோர்க்::இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல்போதல் சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனமொன்று அறிக்கை ஒன்றைசமர்ப்பிக்க உள்ளது.
நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைஅமர்வுகளில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான சம்பவங்கள் 2009ம் ஆண்டு முல்லைத்தீவு பிரதேசத்தில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள்தொடர்பில் ஆராய்வதற்காக சந்தர்ப்பம் அளிக்குமாறு ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரையில் உரிய பதிலளிக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள்நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment