Sunday, February 26, 2012

ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இந்தியா மேற்கொள்ளப்போகும் தீர்மானத்தை இலங்கை எதிர்பார்த்திருக்கிறது-ஹெல உறுமய!

Sunday, February 26, 2012
இலங்கை::ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் சமர்ப்பிக்கப்படும்போது, இந்தியா என்ன தீர்மானம் மேற்கொள்ளப்போகிறது என இலங்கை பார்த்துக்கொண்டிருப்பதாக ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வண அதுரெலியே ரதன தேரர் கூறியுள்ளார்.

அவர்களின் தீர்மானம் மிக முக்கியமானது. அவர்கள் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுக்கு சார்பாக தீர்மானமெடுப்பார்களா என எமக்கு இன்னும் தெரியாது. ஆனால் அவர்களுக்கு இலங்கை பல வழிகளில் முக்கியமான நாடென நாம் எண்ணுகிறோம்.

இலங்கையை அனைத்து வழிகளிலும் ஓரங்கட்டுவதற்கு முயற்சிக்கும் அமெரிக்காவுக்கும் அதன் சகாக்களுக்கும் எதிராக அனைவரும் அரசியல், சமூக, மத பேதங்களை மறந்துவிட்டு ஒன்றுபட வேண்டும்' என அவர் கூறினார்.

அமெரிக்கா தலைமையிலான படைகள், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா ஆகிய நாடுகளில் மேற்கொண்ட அட்டூழியங்களுக்கு எதிராக ஒருவரும் குரல்கொடுக்கவோ நடவடிக்கை மேற்கொள்ளவோ இல்லை. தற்போது அவர்கள் ஈரான், சிரியா போன்ற நாடுகளிலும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்' எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment