Sunday, February 26, 2012சென்னை::என்கவுன்டரில் கொல்லப்பட்ட வங்கி கொள்ளை கும்பல் தலைவன் வினோத் குமார் உடல், விமானம் மூலம் பீகாருக்கு கொண்டு செல்லப்பட்டது. வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் 5 பேர் போலீசாரால் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 5 பேரின் உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் என்கவுன்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சிபிசிஐடி விசாரணைக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.சுட்டுக்கொல்லப்பட்ட 5 பேரின் உடல் பிரேத பரிசோதனை நேற்று அரசு பொது மருத்துவமனை யில் நடந்தது. இதில் முதலில் கும்பல் தலைவனான வினோத் குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் பிரேத பரிசோதனை நடந்துள்ளது. இதுபோல¢ ஒவ்வொரு கொள்ளையர்களின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்ய சுமார் 2 மணி நேரம் ஏற்பட்டது. இதற்கிடையில் வினோத் குமார் உடலை வாங்குவதற்காக அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அரசு பொது மருத்துவமனைக்கு வந்திருந்தனர். பிரே பரிசோதனை முடிந்து மகன் வினோத் குமார் உடலை வாங்கும் போது அவரது தந்தை கண்ணீர் விட்டு கதறினார். பிறகு வினோத் குமார் உடல் சொந்த ஊரான பீகாருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு முன்பு உடலை பதப்படுத்துவதற்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்றிரவு வரை வைத்து பதப்படுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை 9.45 மணி அளவில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் வினோத்குமார் உடலை பெங்களூருக்கு தந்தை மற்றும் உறவினர்கள் கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் பீகாருக்கு கொண்டு செல்லப்பட்டது.
4 கொள்ளையரின் உடலை வாங்க ஆள்இல்லை
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வினோத் குமார் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. பின்னர் விமானம் மூலம் கொண்ட செல்லப்பட்டு விட்டது. இந்நிலையில் மற்ற 4 கொள்ளையர்களின் உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்து அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதுவரை கொள்ளையர்களின் உறவினர்கள் யாரும் வரவில்லை. போலீசை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் அவர்களது படத்தை பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் அனுப்ப உள்ளோம். அங்கு போஸ்ட்ர் ஒட்டி உறவினர்களை தேடி உள்ளோம். அதுவரை கொள்ளையர்கள் உடல் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும்“ என்றார்.
No comments:
Post a Comment