Monday, February 27, 2012மண்டபம்::புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டணத்திலிருந்து, பிப்., 11ல், ரவி என்பவரது விசைப்படகில், சேகர்,25, முத்துமணி,25, ஆரோக்கியம்,50, ஆகியோர் கடலுக்குச் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது விசைப்படகு திசைமாறி, இலங்கை கடல்பகுதிக்குள் சென்றது. அப்பகுதியில், ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மூன்று மீனவர்களையும், படகையும், ஊர்காவல் துறை, கோர்ட்டில் பிப்., 13ல் ஆஜர்படுத்தினர். மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, இந்திய தூதரகம் சார்பில், அங்குள்ள வீட்டில் தங்க வைக்கப்பட்டனர். மூன்று மீனவர்களையும், படகையும், இலங்கை கடற்படையினர், இந்திய கடலோர காவல்படையிடம், சர்வதேச கடல் எல்லையில் (26.02.2012) மாலை, 5 மணிக்கு ஒப்படைத்தனர். மீனவர்கள் மண்டபம் வந்தனர். இதேபோல், தூத்துக்குடி பகுதியிலிருந்து எல்லை தாண்டி சென்ற விசைப்படகும், இரண்டு மீனவர்களும் வர உள்ளதாக, "கியூ' பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment