Monday, February 27, 2012ஜெனிவா::ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கையின் பிரதிநிதிகள் நாளை ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் விளக்கமளிக்க உள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவாவிலிருந்து தொலைபேசியூடாக கருத்து வெளியிட்ட அமைச்சர் அந்த பிரேரணையை கொண்டு வர முயற்சிப்பவர்கள் மத்தியஸ்த மனோநிலையில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது
எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படாது இருந்தாலே பிரேரணையொன்றை கொண்டுவர நேரிடும் எனவும் தாம் பாரியளவிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினர்
அத்தகைய மிகப்பெரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பாக விளக்கமளித்தும் அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இந்தப் பிரேரணை கொண்டுவருபவர்கள் இலங்கையின் மனித உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கத்தில் செயற்படுவார்கள் அல்லவென கருதுவதாக மனித உரிமைகள் அமைச்சர் தெரிவித்தார்
சுயாதீன நாட்டுக்குள் வேறொரு அரசியல் திட்டத்தை செயற்படுத்துவதே அவர்களது நிகழ்ச்சி நிரலாக அமைந்துள்ளதாக எண்ணத் தோண்றுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்
தற்போது உத்தேச பிரேணையின் பிரதிநிகள் ஜெனிவாவிலுள்ள தூதரகங்களுக்கு விநியோகிக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உத்தேச பிரேரணை தம்மிடம் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்
கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த நடவடிக்கைகளுக்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் ஒத்துழைப்பபை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்
ஏற்கனவே ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தும் பணிகள் ஆரம்பித்தள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் எதிர்காலத்தில் மேலும் பல பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான திட்டம் தம்மிடம் உள்ளதாக குறிப்பிட்டார்
அந்த விடயங்களை முன்வைத்ததன் பின்னர் ஏற்கனவே கூறியதை போன்று குறித்த பிரேரணையை கொண்டு வர முயற்சிக்கும் நாடுகள் மீள்பரீசீலனை செய்ய நேரிடும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலம் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment