Sunday, February 26, 2012

இலங்கையில் வாழ்ந்து வரும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கத்தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது!

Sunday, February 26, 2012
வாஷிங்டன்::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உத்தேச தீர்மானத்திற்கு எதிராகநாளைய தினம் நடைபெறவுள்ள பாரிய போராட்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்கள்மேற்கொள்ளப்படுகின்றன.

அமெரிக்கத் தூதரகத்திற்கு எதிரில் பாரியளவில் போராட்டங்கள்நடத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெறும் தினங்களில்அமெரிக்கத் தூதரகத்திற்கு சமூகமளிப்பதனை தடுக்குமாறு தூதரக அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இலங்கையின் உள்நாட்டு ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல்கள்தொடர்பில் அமெரிக்கப் பிரஜைகள் உன்னிப்பாக கவனம் செலுத்தி, நிலைமைகளைஅவதானிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment