Friday, February 24, 2012
இலங்கை::புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எவ்.எம் வானொலிக்கு வழங்கிய செவ்வி- புளொட் தலைவர் திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், எவ்.எம். வானொலிக்கு இன்று விசேட செவ்வியொன்றை வழங்கியுள்ளார். இதன்போது ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு,
கேள்வி: கடந்தவாரம் வவுனியாவில் ஐந்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இந்த இணைவு எதனைச் சாதிக்குமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: இன்று தமிழ்க் கட்சிகள் மாத்திரமல்ல தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு கருத்தொருமைப்பாடும், ஒற்றுமையும் நிச்சயமாக வரவேண்டும். அதுதான் இன்று எமக்கு இருக்கக்கூடிய பலமாக இருக்கும். இன்றிருக்கின்ற சூழ்நிலையிலே நாங்கள் மிகவும் பலவீனமான நிலையிலே சகல ரீதியிலும் அதாவது எண்ணிக்கையில், பொருளாதாரத்தில் கல்வியில் என எல்லாவற்றிலுமே மிகவும் பலவீனமாக இருக்கின்ற நிலையில் எங்களுடைய ஒற்றுமைதான் எங்களுக்கு உதவுமென்று நான் நம்புகின்றேன்.
கேள்வி: இந்தக் கூட்டத்தின்போது தனக்குப் பிறகு கூட்டமைப்பின் தலைமைப்பொறுப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி எடுத்துக்கொள்ளலாம் என்று இரா.சம்பந்தன் கூறியிருந்தாரே, இது எந்தளவு நடைமுறைச் சாத்தியமானது?
பதில்: என்னைப் பொறுத்தமட்டில் எதுவுமே சாத்தியப்படக்கூடிய கூற்றுக்கள்தான். ஏனென்றால் சம்பந்தன் அண்ணர் கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்றார். அவர் தலைமைவகித்துச் செல்லவேண்டும். அவருடன் சேர்ந்து திரு.சங்கரி அண்ணர் அவர்களும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட விருப்பமாக இருக்கின்றது. இன்று இருக்கக்கூடிய மூத்த தலைவர்கள் இருவர் அவர்கள்தான். மிகவும் நீண்ட காலமாக தமிழ்மக்களுடைய இந்த போராட்டத்தில் பங்குபற்றியவர்களாக இருந்தவர்கள். அத்துடன் அவர்கள் சாத்வீகப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்து நீண்டகாலம் இயங்கிவந்தவர்கள். ஆகவே அவர்களுடைய தலைமையில் அதாவது சம்பந்தன் அண்ணரோ அல்லது சங்கரி அண்ணரோ தலைமையிலே கூட்டமைப்பு செல்வதிலே எந்தத் தவறும் இல்லை. இன்று இருக்கின்ற சூழ்நிலையிலே சம்பந்தர் அண்ணர் தலைமை வகிக்கின்றார். அவர் சரியான வழியிலே தமிழ் மக்களுடைய பிரச்சினைத் தீர்வுக்கான விடயங்களை எடுத்துச் செல்கிறார் என்று நாங்கள் அனைவரும் நம்புகின்றோம்
கேள்வி: கூட்டமைப்பின் மேற்கோள்கள் யாவும் நாடாளுமன்றக் குழுவில் தங்கியிருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது உங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்; வீ.ஆனந்தசங்கரியையும் இணைத்துக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் எப்போது ஆரம்பமாகும்?
பதில்: கூட்டமைப்பு இருக்கின்றது. கூட்டமைப்புக்கு ஒரு வடிவம் அதாவது அதற்கான ஒரு மத்தியகுழு அல்லது அதற்கான ஒரு அமைப்பு வடிவம் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இன்று பாராளுமன்றக் குழுதான் அதனுடைய முடிவெடுக்கின்ற ஒரு குழுவாக இருக்கின்றது. அது தவறு என்றே நினைக்கின்றேன். கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரு குழுவாக இயங்குவதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாக இயங்குவதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கின்றது. ஆகவே முதலிலே ஒரு சரியான அமைப்பைக் கொண்டுவர வேண்டும். அதுதான் ஒரு கோரிக்கையாக இருக்கின்றது. அதன்பிறகு அதைப் பதிகின்றது. பதிந்து அதற்கு யார் செயலாளர் என்பதை எல்லாம் அந்த அமைப்பு முடிவெடுக்கும். முதலில் ஒரு அமைப்பைக் கொண்டுவர வேண்டுமென்பதுதான் என்னுடைய சொந்தக் கருத்தாக இருக்கின்றது.

No comments:
Post a Comment