Friday, February 24, 2012
சென்னை:கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்துக்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இயற்கை விஞ்ஞானி தமிழ்அடியார் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் 260 கிராமங்கள் பாதிக்கப்படும். ரஷ்யாவில் அணுஉலை விபத்து ஏற்பட்டு ஒரு லட்சம் பேர் இறந்தனர். கூடங்குளத்தில் ரஷ்ய அணுஉலை தான் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் திட்டத்தை செயல்படுத்துவோம் என மத்திய அரசு கூறிவருகிறது. இத்திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் விசாரித்து இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

No comments:
Post a Comment