Friday, February 24, 2012
இலங்கை::புத்தளம், தில்லையடி யில் ஆர்.பி.ஜி. ரக ஆயுதங்களின் பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன:-
புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்.பி.ஜி ரக ஆயுதங்களின் பாகங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.
இன்று பிற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை அடுத்து அங்கு பலத்த விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார், மேற்படி வெடிப்புச் சம்பவம் அருகிலுள்ள வீடொன்றிலிருந்து ஏவப்பட்ட வெடிகுண்டு வந்து விழுந்ததாலேயே ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
ஆர்.பி.ஜி. ரக வெடி பொருளின் பாகமொன்றினை சூடாக்கும் போதே அவ்வெடிபொருள் அங்கிருந்து சுமார் 100 மீறறர் தூரம் வரையுள்ள வீட்டில் சென்று வீழ்ந்து வெடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், மேற்படி வெடிபொருள் ஏவப்பட்ட வீட்டிலிலுந்து மேலும் ஒருதொகை ஆர்.பி.ஜி. ரக குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
புத்தளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.சுகதபால, புத்தளம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வி.சிவலிங்கம் உட்பட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment