Friday, February 24, 2012
கொச்சின்::இந்திய மீனவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், இத்தாலி கப்பலில் ஆயுதப் பரிசோதனை நடத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில், தடயவியல் நிபுணர்கள், சிறப்பு காவல்படையினர் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்களை சுட்டுக்கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள இத்தாலி சரக்குக் கப்பலின் பாதுகாவலர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் அதிலுள்ள கைரேகைகளை குழுவினர் ஆய்வு செய்கின்றனர். கப்பலில் உள்ள துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய கடந்த 21ஆம் தேதி கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி, இன்று கப்பலில் ஆயுதப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதேபோன்று தங்கள் நாட்டு அதிகாரிகள் முன்பு தான் கப்பலில் சோதனை நடத்தவேண்டும் என்ற இத்தாலி வெளியுறவு துணை அமைச்சரின் நிபந்தனைப்படி, அந்நாட்டு தூதரக அதிகாரி ஒருவரும் பரிசோதனைக் குழுவில் இடம் பெற்றுள்ளார் என தெரிகிறது.

No comments:
Post a Comment