Friday, February 24, 2012இலங்கை::புத்தளம் - முந்தல் பகுதியில் கடத்தப்பட்ட தமிழ் பாடசாலை சிறுமி ஒருவர் தொடர்பிலான விசாரணைகளுக்காக, ஐந்து காவற்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, புத்தளம் காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
முந்தல் காவற்துறை நிலையத்துக்கு முன்னால் உள்ள முன்பள்ளி ஒன்றில் இருந்து, ஸ்வஸ்திகா என்ற மூன்றறை வயது சிறுமி, நேற்று முன்தினம் கடத்தப்பட்டார்.
ஸ்வஸ்திகாவின் மாமா என கூறி, முன்பள்ளிக்கு வந்த ஒருவர், அவருடைய கடத்துலுடன் தொடர்பு பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியை கடத்திச் சென்றவர், அவரின் குடும்ப உறவினர் என தகவல் கிடைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சிறுமியை கடத்திச் சென்றவர் நேற்றைய தினம் சிறுமியின் தாயாரது தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி, சிறுமியை விடுவிக்க வேண்டும் எனில், கப்ப தொகை ஒன்று வழங்கப்பட வேண்டும் என தெரிவித்ததாக, காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment