Friday, February 24, 2012

சவேந்திரசில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினமும் ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்கள் கேள்வி!

Friday, February 24, 2012
நிவ்யோர்க்::ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை குறித்த ஆலோசனை குழுவில், இலங்கையின் துணை பிரதிநிதி சவேந்திரசில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினமும் ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்த குழுவில் சவேந்திரசில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, குழுவின் தலைவர் லுயிஸ் ப்ரெசேட் தெரிவித்திருந்தார்.

இது அவரது அதிகாரத்தை மீறிய செயற்பாடு என ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித்த கோஹன்ன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சவேந்திரசில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன், கவனத்தில் கொண்டிருப்பதாக சபையின் பேச்சாளர் எட்வார்டோ டெல் பயே நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வா கலந்துக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் ஒன்றின் போது, இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர் மெத்திவ்ஸ{க்கு தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரிடம் நேற்றைய தினம் மெத்தீவ்ஸ் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடத்தில் இடம்பெறுகின்ற எந்த கூட்டத்துக்கும் தமக்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சவேந்திரசில்வா கலந்துக் கொண்ட இந்த கூட்டத்தில் தமக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் என்னவென அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இது குறித்த தகவல்கள் தம்மிடம் இல்லை என தெரிவித்த பேச்சாளர், ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகத்திடம் இது தொடர்பில் ஆராயுமாறு கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment