Friday, February 24, 2012
சென்னை::நான்கு ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த உடன்குடி அனல்மின் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான செலவுத் தொகை ரூ.8 ஆயிரம் கோடியை தமிழக அரசே மின்வாரியத்துக்கு வழங்குகிறது. இதன்மூலம் தமிழகத்துக்கு விரைவில் 1600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபரில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பாரத மிகுமின் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும் இடையே ஏற்பட்டது. திட்ட மதிப்பீடு ரூ.8 ஆயிரம் கோடி என்று கணக்கிடப்பட்டது. இதற்கான பங்கு மூலதன தொகையில் 26 சதவீதம் தமிழ்நாடு மின்வாரியத்தாலும், 26 சதவீதம் பாரத மிகுமின் நிறுவனத்தாலும் வழங்கப்படும் என்றும் மீதி 48 விழுக்காடு தனியார் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
பாரத மிகுமின் நிறுவனத்தின் ஒத்துழைப்பின்மை உள்பட பல்வேறு காரணங்களால் இத்திட்டம் செயல்படுத்தப்படாமலேயே உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நேற்று நடத்தினார். இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்துக்கான மொத்த செலவினமான ரூ.8 ஆயிரம் கோடியை தமிழக அரசே, மின்வாரியத்துக்கு பங்கு மூலதனமாக வழங்கும். மேலும் மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் இத்திட்டத்துக்கான நிலக்கரியை ஒதுக்கீடு செய்து எந்த உத்தரவும் வழங்காத நிலையில், இத்திட்டத்துக்கு தேவையான நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தெரிவித்து, அதன் அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த உடன்குடி அனல்மின் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 1600 மெகாவாட் மின்சாரம் முழுமையும் தமிழகத்துக்கே கிடைக்க வழிவகை ஏற்படும். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment