Saturday, February 4, 2012

கண்டி போகம்பறைச் சிறைச்சாலையில் திடீர் சோதனை: கைதிகளிடமிருந்து ஹெரோயின், பணம், தொலைபேசி என்பன மீட்பு!

Saturday, February 04, 2012
இலங்கை::கண்டி போகம்பறைச் சிறைச்சாலையில் திடீர் சோதனை: கைதிகளிடமிருந்து ஹெரோயின், பணம், தொலைபேசி என்பன மீட்பு:-

கண்டி போகம்பறைச் சிறைச்சாலையில் திடீர் சோதனை ஒன்றினை நடத்திய சிறைக்கூட அதிகாரிகள் கைதிகளிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள், பணம், நவீன ரக கையடக்க தொலைபேசி என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போகம்பறை சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகள் அண்மையில் திடீர்ச் சோதனை ஒன்றினை மேற்கொண்டனர்.

இச் சோதனையின் போது விளக்கமறியல் கைதி ஒருவரிடம் ஹெரோயின் போதைப்பொருள், பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலும் 13 சிறைக்கைதிகளிடமிருந்து நவீன ரக கமராவுடன் கூடிய 13 கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து சிறைச்சாலை அதிகாரி திஸ்ஸ ஜயசிங்க மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

No comments:

Post a Comment