Saturday, February 04, 2012இலங்கை::இலங்கையின் 64ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரத்து 1450 சிறைக்கைதிகள் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றும் அபராதம் செலுத்த முடியாத சிறைக் கைதிகளே விடுதலை பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பீ.டபிள்யூ.கொடிப்பிலி குறிப்பிட்டார்.
இவர்களில் அதிகமானோர் போகம்பறை சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுதவிர வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து கைதிகளும் மஹர சிறைச்சாலையிலிருந்து கைதிகளும் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் கூறினார்.
சுங்க சட்டளைச்சட்ட மீறல் மற்றும் ஆட்கொலை உட்பட 27 வகையான குற்றங்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட மாட்டர்கள் என்றும் அவர் தெரிவித்தார்
இதேவேளை சுதந்திர தினத்தை முன்னிட்டு மேலும் பெரும்பாலான கைதிகளின் தண்டனைக்காலத்தை ஒரு வாரத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்.சிறைச்சாலையில் 64 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எட்டு கைதிகளுக்கு விடுதலை!
யாழ்.சிறைச்சாலையில் கடந்த ஆறுமாதங்களாக தடுத்துவைக்கப்பட்ட சிறிய குற்றங்கள் செய்து தண்டப்பணம் கட்ட முடியாத எட்டுச் சிறைக் கைதிகள் இன்றைய தினம் இலங்கையின் 64 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.சிறைச்சாலையிலிருந்து 4 பேரும் பலாலி விவசாயப் பண்ணையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 4 சிறைக் கைதிகளுமே இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் செனரத் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கைதிகள் சிறைச்சாலையிலிருந்து வெளியில் விட்டதும் சிறைச்சாலையை விட்டுப் போவதற்கு மனம் இல்லாமல் இருந்துள்ளதுள்னர். அவர்களிடம் வினாவிய போது விடு செல்வதற்கு பணம் இல்லை எனப் பதில் அளித்ததுடன் எங்கு செல்வது என்பது தெரியாமல் தவித்துக் கொண்டு நின்றனர்.
யாழ் சிறைச்சாலையில் விடுதலை செய்யப்பட்ட வெளிமாவட்டக் கைதிகள் இவர்கள் மீண்டும் சிறைச்சாலைக்கு அதிகாரிகளினால் சிறைக்குள் வரவளைக்கப்பட்டு அவர்கள் வீடு செல்வதற்குரிய பணம் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment