Saturday, February 04, 2012புதுடெல்லி::2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் ப சிதம்பரத்தை இணை குற்றவாளியாக்கி விசாரிக்கத் தேவையில்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சுப்பிரமணி சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்வதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி அறிவித்தார்.
இதனால் ப சிதம்பரத்தின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தி அகற்றப்பட்டுள்ளது.
ரூ 1.76 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டு வழக்கில், பிரதான குற்றவாளிகளுள் ஒருவராக ப சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்றும், அதற்கான சான்றுகள் தன்னிடம் உள்ளதாகவும் கூறி சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ பி ஷைனி.
இந்த வழக்கின் முடிவில்தான் சிதம்பரத்தின் அரசியல் எதிர்காலமே இருந்தது. எனவே தீர்ப்பைக் கேட்க ஏராளமானோர் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.
காலையிலேயே நீதிமன்றத்துக்கு வந்துவிட்ட சுப்பிரமணிய சாமியை, பிற்பகல் 12.30க்கு வருமாறு நீதிபதி கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிற்பகல் 1.40 க்கு தீர்ப்பை அறிவித்தார் ஓ பி சைனி.
"2 ஜி முறைகேடு வழக்கில் ப சிதம்பரத்தை இணை குற்றவாளியாக சேர்க்க தேவையில்லை. இது தொடர்பா சுப்பிரமணிய சாமி தொடர்ந்துள்ள மனுவை ரத்து செய்கிறேன்," என்றார் நீதிபதி.
இந்தத் தீர்ப்பைக் கேட்டு காங்கிரஸ் கட்சியினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ப சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டதும், இதுகுறித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என நீதிபதிகள் அறிவித்ததும் நினைவிருக்கலாம்.
சிதம்பரத்தின் மீதான மனு தள்ளுபடி!
புதுடெல்லி::ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த மனுவை டெல்லி சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ப.சிதம்பரத்ததை குற்றவாளியாக கருதி, அவரை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என நீதிபதி சைனி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் போது, ப.சிதம்பரத்துக்கு எதிராக வடுதல் ஆவணங்கள் வழங்கப்படும் என சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.***
நான் வருத்தபட மாட்டேன் : சுப்பிரமணியசாமி
இதனையடுத்து தீர்ப்பு வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியசாமி 'மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு நான் வருத்தப் பட மாட்டேன், இந்த தீர்ப்பு என்னை வியப்படைய செய்துள்ளது. இந்த வழக்கில் சரியான தீர்ப்பு வரும் வரை வழக்கு தொடர்ந்து கொண்டே இருப்பேன்.. எந்த கோர்ட் என்னை கைவிட்டாலும்... என்னுடைய முயிற்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்... தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போகிறேன்... மேல் முறையீடு செய்யும் போது, ப.சிதம்பரத்துக்கு எதிராக வடுதல் ஆவணங்கள் வழங்கப்படும்' என்று கூறினார்.***
சிதம்பரத்துக்கு பதவி தப்பியது
ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை செய்ய தேவையில்லை என டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், அவரது பதவி தப்பியது. சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டிருந்தால் ப.சிதம்பரம் பதவி விலக நேரிட்டு இருக்கும்.
No comments:
Post a Comment