Friday, February 24, 2012இலங்கை::முந்தல் பகுதியில் பாலர் பாடசாலை ஒன்றிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுமி இன்று பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
சிறுமியை கடத்திச் சென்றதாக கூறப்படும் நபரையும், அவருக்கு உதவிய மற்றுமொரு பெண்ணையும் கைதுசெய்ததுடன், பொலிஸார் சிறுமியையும் காப்பாற்றியுள்ளனர்.
சிறுமியின் தாயாரின் உறவினர் ஒருவராலேயே நேற்று முன்தினம் அவர் கடத்தப்பட்டுள்ளார்.
சிறுமி பாலர் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற சந்தேகநபர், அவரை அழைத்துச் சென்றதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment