Thursday, February 23, 2012இலங்கை::சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து தங்கக் கட்டிகளை கொண்டு வந்த தம்பதியினரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக சுங்கப் பிரதி பணிப்பாளர் சட்டத்தரணி ராஜ்மோகன் தெரிவித்தார்.
நேற்று கைது செய்யப்பட்ட குறித்த தம்பதியினரிடம் 11 இலட்சத்து 41 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மூன்று தங்கக் கட்டிகள் இருந்ததாகவும் அவர் கூறினார்.
சென்னையிலிருந்து நேற்று காலை 9.35 மணியளவில் இலங்கை வந்த ஐ.எக்ஸ் 672 எயார் இந்தியா விமானத்திலேயே குறித்த தம்பதியினர் வந்துள்ளனர்.
கணவன், மனைவியரின் குறித்த பயணப் பொதிகளை சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் பெண்ணின் உள்ளங்கையில் ஏதோவொன்றை மறைத்து வைத்திருப்பதை அவதானித்துள்ளனர்.
அதன் பின்னர் அப்பெண்ணின் கையிலிருந்த பொதிகளை சோதனையிட்ட போது காபன் கடதாசியில் சுற்றிய நிலையில் மூன்று தங்கக் கட்டிகள் இருந்துள்ளன.
சுங்க அதிகாரிகளின் பிடியில் சிக்கிய அத்தம்பதியினர் கண்டிப் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன் மேலதிக விசாரணையை பிரதிப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இருவர் கைது!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றதாகத் தெரிவிக்கப்படும் பயணிகள் இருவரை அபுதாபி விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து 7.4 கிலோகிராம் மெத்தம்பெற்ரைன் படிகங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
பயணி ஒருவரின் பதற்றத்தைக் கண்டு சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், அப்பயணியின் பையைத் திறக்குமாறு கூறினார். குறித்த பையை சோதனையிட்டபோது அப்பையிலிருந்து சுமார் 5 கிலோகிராம் மெத்தம்பெற்ரைன் படிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்தின் பின்னர் சுங்க அதிகாரிகள் அதே விமானத்தில் செல்லவிருந்த மற்றுமொரு பயணியின் பையை சோதனையிட்டபோது 3.4 கிலோகிராம் மெத்தம்பெற்ரைன் படிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment