Thursday, February 23, 2012

இலங்கை மனித உரிமை விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையீடு செய்ய வேண்டியதில்லை-ரஸ்யா அறிவித்துள்ளது!

Thursday, February 23, 2012

இலங்கை::இலங்கை மனித உரிமை விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையீடு செய்ய வேண்டியதில்லை என ரஸ்யா அறிவித்துள்ளது.
இறையாண்மையுடைய நாடொன்றின் உள்விவகாரங்களில் எவரும் தலையீடு செய்ய வேண்டியதில்லை என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் விளாடிமீர் பீ மிகொய்லா தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டில் ஆட்சி செய்யும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் பொறுப்பு பலம்பொருந்திய நாடுகளுக்கு கிடையாது. நாட்டு மக்களே இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

ஜனநாயாக ரீதியாக நிமமிக்கப்பட்ட அரசாங்கமொன்றின் நடவடிக்கைகளை எவரும்விமர்சனம் செய்யக் கூடாது.

இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கும் என நம்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ரஸ்யா தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment